இனிவரும் காலங்களில் ட்ரோன்களின் பயன்பாடு
தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்போல.
விவசாயம், இராணுவப் பாதுகாப்பு போன்றவற்றுக்குப்
பயன்பட்டுவரும் ட்ரோன் தற்போது மருத்துவத்துறையிலும்
பயன்படத் தொடங்கியுள்ளது.
அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை கைகொடுக்கிறது.
அதேசமயம் தொலைவான இடங்களுக்கு உடனே சென்று சிகிச்சைபெற
ஹெலிகாப்டர்கள்தான் இப்போது உள்ளன.
ஹெலிகாப்டரைவிட சிறிய வடிவில் ட்ரோன் உதவியுடன் பறந்து
செல்லும் ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம்.
நோயாளியையும் ஒரு உதவியாளரையும் சுமந்துகொண்டு
பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுள்ளே லைவ் கேமரா வசதியும் ஆடியோ கனெக்சனும் இருக்கிறது.
இதனால், மருத்துவ மனைக்குள் நோயாளி வந்துசேர்வதற்குள்
நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ
ஆலோசனைகளை உதவியாளருக்குக் கொடுக்க முடியும்.
இந்த ட்ரோன் ஆம்புலன்ஸ் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில்
பறக்கும். சிட்டாய்ப் பறக்கும் இந்த ட்ரோனுக்கு பைலட் கிடையாது.
மற்றோர் ஆச்சரியம்……ஜிபிஎஸ் லொக்கேஷனை அடையாளம்
கண்டு தானாகப் பறந்து செல்கிறது.
இதன் விலைதான் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.
ஆம், வெறும் ஆறு கோடி தானாம்.
அது சரி, மனித உயிர் விலைமதிப்பற்றது தானே….
மருத்துவத்தில் தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும்
உயிருக்கு ஆபத்துதானே….
தாமதத்தைத் தவிர்த்து உயிரைக் காப்பாற்ற இதுபோன்ற
பறக்கும் ஆம்புலன்ஸ் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
என்றே சொல்லலாம்.