Monday, December 8, 2025

அவரை அடக்க நினைத்த ஆதிக்க கூட்டம் இன்று நடிக்கிறது : முதல்வர் ஸ்டாலின் பதிவு

சட்டமேதை அம்பேத்கரின் நினைவுநாளை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என குறிப்பிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி என்றும் அவரது வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்” என பதிவிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News