பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் “அமேசான் நவ்” எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இந்த ஆண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது. இதற்கு வரவேற்பு பெருகி வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது.
இதற்காக 100-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் மளிகைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என அமேசான் கூறியுள்ளது.