1 நாளைக்கு 3 மாதுளை…அளவில்லா ஆரோக்கியத்துக்கு அற்புதமான SHORTCUT!

45
Advertisement

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளைப்பழங்களை தினசரி சாப்பிட்டு வருவதால், மேம்பட்ட ஆரோக்கியத்தை அடைவதோடு இதய நோயை தவிர்க்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு மூன்று மாதுளை பழங்களை சாப்பிடும் போது இரத்தக் குழாய்கள் சுத்தமடைவதோடு உயர் இரத்த அழுத்தமும் குறைகிறது.

இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்குவதால் இதய நோய் பாதிப்பு குறைகிறது. நார்ச்சத்து, விட்டமின், minerals மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள மாதுளையை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

Advertisement

கேன்சர் செல்களை அழிப்பது மற்றும் பரவ விடாமல் செய்யும் தன்மை கொண்ட மாதுளை, ஆரம்ப நிலை ஈரல் புற்றுநோயை வெகுவாக கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

சிறுநீரக கற்களை கரைப்பதில் பங்களிக்கும் மாதுளை, சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.

தசைகளின் உள்வீக்கத்தை சீராக்கும் மாதுளை பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

உடலின் செயல்பாட்டு ஆற்றலை அதிகரித்து அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் மாதுளையை அன்றாடம் எடுத்துக்கொள்ள உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.