Tuesday, July 1, 2025

அசத்தும் ‘BSNL’ ! சிம் கார்டே இல்லாம 5G நெட்வொர்க்! விலையை கேட்டா ‘Shock’ ஆகிடுவீங்க!

இந்தியாவில் இனிமேல் இன்டர்நெட் பயன்படுத்த சிம் கார்டும் தேவையில்லை, கேபிளும் தேவையில்லை. BSNL நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய 5G-FWA எனப்படும் 5G Fixed Wireless Access சேவை, இந்தியாவில் டிஜிட்டல் வசதிகளுக்கு ஒரு புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது.

இது எந்த ஒரு மொபைல் சாதனமோ, சிம்மோ இல்லாமலேயே வேலை செய்யும். ஒரு மாதம் 999 ரூபாய்க்கு 100 Mbps வேகம் கிடைக்கும். வேகம் அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் 1499 ரூபாய் செலுத்தி 300 Mbps டேட்டா வேகத்துடன் இதைப் பெறலாம்.

இந்த சேவையை பெற, BSNL ஒரு சிறிய கருவியை உங்கள் வீட்டின் மேல்மாடியில் பொருத்தும். இதை CPE (Customer Premises Equipment) என்கிறார்கள்.

இந்த சாதனம் உங்கள் வீட்டின் அருகே உள்ள 5G சிக்னலை பிடிக்கும். அதை உங்கள் வீட்டுக்குள் Wi-Fi ஆக மாற்றி தரும்.

இது வேலை செய்ய எந்த கேபிளும் வேண்டாம், எந்த சிமும் வேண்டாம்.

இது பிரதானமாக பின்தங்கிய இடங்களை நோக்கி வழங்கப்படுகிறது. பெரிய நகரங்கள் அல்ல, ஆப்டிக்கல் ஃபைபர் போட முடியாத இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் BSNL இந்த சேவையை முதலில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அங்கே தொழில்கள், வீடுகள் போன்றவை ஏற்கனவே ஹை ஸ்பீட் இன்டர்நெட் வசதியின்றி தவித்துவருகின்றன. அவர்களுக்காகவே இந்த தீர்வு.

இது வழக்கமான பிராட்பேண்ட்(Broadband) சேவையைப் போலவே வேலை செய்யும். ஆனால் பெரிய வேறுபாடு என்னவென்றால், இது ஒரு wireless சேவை. அதனால், தடைகள் இல்லாமல், நேரடியாகவே 5G வேகம் கிடைக்கும். இந்த சேவையை நிறுவுவதற்கான கட்டண விவரங்கள், பிளான்கள் மற்றும் உங்கள் பகுதிக்கு இது வந்திருக்கிறதா என்பதை BSNL இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

தற்போது சில பகுதிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால், விரைவில் நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதே நேரத்தில், வோடபோன் ஐடியா நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் 5G சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

தொலைநோக்கில் பார்க்கும்போது, சிம்கள் இல்லாமல், கேபிள்கள் இல்லாமல் ஹைஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கக்கூடிய நாடாக இந்தியா விரைவில் மாறக்கூடும். BSNL 5G-FWA அதற்கான முதல் படியாகக் காணப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news