காஷ்மீர் கோட்ட ஆணையர் விஜய் குமார் பிதூரி இன்று (ஆக. 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்: அண்மையில் பெய்துள்ள கனமழையால் மோசமான வானிலை நிலவுவதாகவும், இதனால் யாத்திரை பாதைகள் சேதமடைந்திருப்பதாகவும் அங்கு பராமரிப்பு பணிகள் மேர்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கு வரையறுக்கப்பட்டுள்ள பால்டல், பஹல்காம் ஆகிய இரு வழித்தடங்களிலும் ஆக. 3 முதல் அதிக பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இரு வழித்தடங்களிலும் அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.