Tuesday, January 27, 2026

“ஏ திமுக அரசே!” என்று பொங்குவார், ஆனால் “ஏ பாஜக அரசே!” என்று பொங்க மாட்டார் – விஜய்யை விமர்சித்த ஆளூர் ஷாநவாஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி எம்.பி., ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.

இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், “ஏ திமுக அரசே!” என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், “ஏ பாஜக அரசே!” என்று பொங்க மாட்டார்.

எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.

பொங்கலோ பொங்கல்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News