Wednesday, August 20, 2025
HTML tutorial

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் போலீசாரால் கைது..!!

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜுன் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கூட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் எனவும் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன், சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News