Sunday, December 28, 2025

கனமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் – உதயநிதி ஸ்டாலின்

கனமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் பருவமழை மீட்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நுங்கம்பாக்கம் வார்டு 111இல் ஜெய்சங்கர் பாதை பகுதியில் இருந்து நிதின் என்பவரிடம் இருந்து வந்த புகாரினை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related News

Latest News