சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து

சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ விமானப் பயணிகளை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் பாதுகாப்புப் படையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் நேற்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வருகை தரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 65 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து விமானப் பயணிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related News

Latest News