இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் BSNL, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் மேம்படுத்தலுக்கு தயாராகி வருகிறது. அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள், நிறுவனம் தனது அனைத்து 4G கோபுரங்களையும் 5G-க்கு மாற்றும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற உள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 92,564 BSNL கோபுரங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டன. இது BSNL-ன் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும்.
இந்தியா, உலகில் வேகமாக 5G சேவையை அறிமுகப்படுத்திய நாடாக திகழ்கிறது. 99.8% மாவட்டங்களில் 5G கவரேஜ் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப தன்னிறைவை மேலும் வலுப்படுத்துகிறது.
BSNL தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் சந்தாதாரர் தளம் 8.7 கோடியில் இருந்து 9.1 கோடிக்கு உயர்ந்துள்ளது.
2023 ஜூன் மாதத்தில் வெறும் 9,000 4G தளங்களே இருந்த நிலையில், இன்று அவை 98,000 தளங்களை கடந்து விட்டன. இவை 22 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளிக்கின்றன.