அட்சய திருதியை தங்கம் விற்பனை; மளிகை பொருட்கள் போல ஆர்டர் செய்தல் போதும்.. 20 நிமிஷத்துல தங்கம் டெலிவரி!!

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் பெருமளவில் நகை கடைகளுக்கு செல்லும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. இந்த நாளில் சிறு முதலீடாக ஒரு கிராம் தங்க நாணயமாவது வாங்கி வைத்தால் நன்மை கிடைக்கும் என பலர் கருதுகின்றனர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக நகை வாங்க வேண்டியவர்கள் கூட, இந்நாளை சிறப்பாகக் கருதி நகை வாங்குவது வழக்கமாகியுள்ளது.

இதனால் இன்று நகை கடைகளில் பெரும் கூட்டம் காணப்படும். சிலர் முன்பே நகைகளை ப்ரீ-புக்கிங் செய்து வைத்திருப்பதால் நேரடியாக சென்று பணம் செலுத்தி வாங்கி செல்கின்றனர். ஆனால் புதிதாக இன்று தான் வாங்குபவர்கள் கடும் கூட்ட நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் நகைகளை விட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாங்குவதை எளிதாக கருதுகின்றனர். கடைகளும் இதற்காக தனி ஸ்டால்களை அமைத்துள்ளன.

இந்நிலையில், குயிக் காமர்ஸ் செயலிகள் மூலம் தங்க நாணயங்களை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெறும் வசதி உருவாகியுள்ளது. Swiggy Instamart, Zepto, Blinkit போன்ற நிறுவனங்கள், Tanishq, Kalyan Jewellers, Senco Gold மற்றும் Joyalukkas போன்ற முன்னணி நகை நிறுவனங்களுடன் இணைந்து சேவையை வழங்குகின்றன. இதனால் அரை கிராம் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயங்களை வீட்டிலேயே ஆர்டர் செய்து பெற முடிகிறது.

எனினும், நம்பகமான நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறோமா என்பதை உறுதி செய்தல் அவசியம். பிஐஎஸ் ஹால்மார்க் சான்றிதழ், ரசீது மற்றும் ரிட்டர்ன் பாலிசி போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கவனத்துடன் செயல்பட்டால் தங்கம் வாங்குவது மேலும் பாதுகாப்பாகும்.

Related News

Latest News