நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் AK 64 படத்தின் அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் லேட்டஸ்ட்டாக தன்னுடைய கார் ரேஸ் குரு அயர்டன் சென்னா நினைவாக ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றினை அஜித் வாங்கியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் (MCLAREN Automotive) என்ற நிறுவனம், இந்த ரேஸ் காரை தயாரித்துள்ளது. உலகத்தில் மொத்தம் 500 பேர் மட்டுமே இந்த காரினை வைத்துள்ளனர். லிமிடெட் எடிஷன் என்பதால் விலையும் அதிகம் தான். அதாவது 12 முதல் 15 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில், ” அஜித் குமார் மெக்லாரன் சென்னா காரினை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதால் அயர்டன் சென்னா மீண்டும் உயிர்த்தெழுகிறார்,” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” அஜித் கார் ரேஸிலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும், ” என்று அவரை வாழ்த்தி வருகின்றனர்.