துணிவு படத்துல கடைசி வரைக்கும் புரியாத அந்த ட்விஸ்ட்!

126
Advertisement

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வங்கி கொள்ளையை மையமாக கொண்டுள்ள இந்த படத்தில் credit card, mutual fund, personal loan என்ற பெயரில் பொதுமக்களிடம் வங்கிகள் செயல்படுத்தும் அத்துமீறல்கள் பற்றிய பார்வையை பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

அஜித் தன்னுடைய உடல்மொழி, dialogue delivery, நக்கல் சிரிப்பு, ஸ்டைலான நடனம் என ரசிகர்களை எளிதில் கட்டி போட்டு விடுகிறார். விறுவிறுப்பான action கொண்ட first half, சமூகக்கருத்து கூறும் second half என படம் score செய்துள்ளது. படம் வெளியாகும் முன்னரே, படத்தின் கதாபாத்திரங்களை பெயரோடு அறிமுகம் செய்தது.

அஜித்தின் கதாபாத்திர பெயர் என்னவென்று கூறப்படாத நிலையில், அவர் characterஇன் பெயர் விநாயக் மகாதேவாக இருக்கும் எனவும், இது மங்காத்தா கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்கள் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் படத்தின் டிரெய்லரிலும் அஜித்தின் பெயர் குறிப்பிடவில்லை. இதையடுத்து, படத்தை பார்த்தாவது பெயரை தெரிந்து கொள்ளலாம் என நினைத்த ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருந்தார் வினோத். படத்திலும் அஜித்திற்கு பெயரே வைக்காதது தான் அந்த ட்விஸ்ட். இந்த ட்ரெண்ட்  புதுசா இருக்கே என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.