பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறதா துணிவு? பரபரக்கும் புது அப்டேட்

116
Advertisement

இருதரப்பு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதற்கிடையே, இரு படங்களில் இருந்தும் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் போட்டி போட்டு வருகின்றன. துணிவு படத்தின் போஸ்ட் ரிலீஸ் உரிமத்தை பிரபல OTT தளமான netflix வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலின் போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் துணிவு, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தின் போது OTTயில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற இரண்டு அஜித் படங்களை ஏற்கனவே இயக்கியுள்ள எச்.வினோத் ‘துணிவு’ படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய அதிக சிரத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்கு பிறகு ‘துணிவு’ படத்தில் அஜித், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முழுமையான நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.