Thursday, December 26, 2024

திட்டி அழ வைத்த தயாரிப்பாளர்..வெற்றியால் பதிலடி கொடுத்த அஜித்!

AK 62 படத்தை பற்றிய தகவல்கள் விறுவிறுப்பாக பரவி வரும் நிலையில், அஜித் உடைந்து நின்ற தருணத்தை பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

1999ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் அஜித், மீனா, கார்த்திக், மணிவண்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்.

அஜித்திற்கு நடிப்பிலும், வசூலிலும் சிறப்பாக அமைந்த இந்த படத்திற்கு அவரை  பார்க்க சென்ற போது, வேறு ஒரு தயாரிப்பாளர் அவரை நிற்க வைத்து திட்டி கொண்டிருந்ததாகவும், கலங்கிய கண்களுடன் அஜித் நின்றிருந்ததாகவும் காஜா மைதீன் கூறியுள்ளார்.

கதை கூட கேட்காமல் 25 லட்சம் சம்பளம் கொடுத்தால் போதும் என அஜித் ஒப்புக்கொண்டதாகவும் அதனால் அப்போது அவர் இருந்த பண நெருக்கடியை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் மைதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஜித்திற்கு முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு வேறு நடிகரை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த போது, அவர் நேரடியாக நடிக்க கிளம்பி வந்து மீண்டும் அதிர்ச்சி அளித்ததாக கூறும் மைதீன், அன்றே சண்டை காட்சி படப்பிடிப்பிலும் அஜித் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இத்தனை சிக்கல்களையும் சவால்களையும் அஜித் எதிர்கொண்டதற்கு ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தின் சிறப்பான வெற்றி பரிசாக கிடைத்ததாக மைதீன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Latest news