Wednesday, April 30, 2025

Rules-ஐ ‘பிரேக்’ செய்த அஜித் இதெல்லாம் வேற ‘லெவல்’ Mass

இந்த 2025ம் ஆண்டை அஜித் குமாருக்கான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களாக விழாக்கள், பிரஸ் மீட்டுகள், பொது நிகழ்ச்சிகள் என்று எதிலும் தலை காட்டாமல் இருந்தவர் அஜித். இதனால் அவரின் ரசிகர்கள் சோக மோடிலேயே சுற்றித் திரிந்தனர்.

தற்போது தான் போட்ட அத்தனை Rulesகளையும் உடைத்தெறிந்து, மீண்டும் பொது விழாக்களில் அஜித் பங்குபெற ஆரம்பித்துள்ளார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்கள், கார் ரேஸிங்கில் அடுத்தடுத்து வெற்றி, பத்ம பூஷண் விருது என அஜித்துக்கு இந்த ஆண்டு, உண்மையிலேயே சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

அத்துடன் ஊடகங்களுக்கும் மீண்டும் பேட்டி அளிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்தவகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், அஜித் பல்வேறு விஷயங்களை மனந்திறந்து பேசியுள்ளார். சொந்த வாழ்வு மற்றும் விருது குறித்து, ” இப்போதும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.

பத்ம பூஷண் விருது கிடைத்ததை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. பட்டங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் அது தேவையில்லை. படம் நடிக்கிறேன். சம்பளம் வாங்குகிறேன். நீங்கள் என்னை அஜித் குமார், அஜித், AK என்று அழைத்தாலே போதும்.

எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமே, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன். மக்கள் என்மீது எக்கச்சக்க அன்பு வைத்திருக்கிறார்கள்.

நான் எந்தத் துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய குடும்பம், எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் மனைவி ஷாலினி, என் குழந்தைகளுக்கு நன்றி.

என்னுடைய வெற்றி, தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள்தான். எல்லோருக்கும் என் நன்றிகள். இந்த விருது நான் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஊக்கமளிக்கிறது,” இவ்வாறு பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில், ”அவரு Rulesஐ எல்லாம் பிரேக் பண்ணிட்டு வருவாரு,” என்று ஒரு வசனம் வரும். தற்போது அஜித்தின் நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

Latest news