ரசிகர்களுக்கு ஹெல்த் டிப்ஸ் கொடுத்த அஜித்

256
Advertisement

தன்னை பின்தொடர்வதால் கூட ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர், கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அஜித்.

அஜித் அவ்வப்போது தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை தனது மேலாளரின் ட்விட்டர் கணக்கு வழியாக பதிவு செய்வது வழக்கம்.

இந்நிலையில், அண்மையில் டினிடஸ் எனப்படும் காது நோயை குறித்த விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ள அஜித், ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் தொடர்ந்து சத்தம் ரீங்காரமிடும் அறிகுறி, கேட்கும் திறன் இழப்பு வரை செல்லலாம் எனவும் இது காதுகளில் சேரும் அதிகப்படியான அழுக்கு, உயர் சத்த அளவுகளை கேட்பது, தலை அடிபடுதல் போன்ற காரணிகளால் ஏற்படலாம் என கூறியுள்ளார்.

மேலும், காதுகளை பாதுகாத்து கொள்ளுங்கள் எனவும் அளவற்ற அன்புடன் என்றும் குறிப்பிட்டுள்ள அஜித்தின் பதிவு அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.