Friday, May 9, 2025

துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

அதிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் விஜய் படத்தோடு போட்டி போட்டு கொண்டு ரிலீஸ் ஆகும் அஜித் படம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ரசிகர்கள் சிலருடன் அஜித் selfie எடுத்து கொள்ளும் வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news