ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அதிவேக இண்டர்நெட் சேவை கிடைப்பதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர் எலான் மஸ்க். அதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் சாட்டிலைட் மூலம் இணையச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்க்கின் திட்டம்.
இந்நிலையில், தனது பயனர்களுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏர்டெல் நிறுவனமானது, ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது.