ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஓடிடி சந்தாவுடன் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. இந்த பதிவில் ரூ.500க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கலாம்.
ரூ.449 ப்ரீபெய்ட் பிளான்
தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ரூ.399 ப்ரீபெய்ட் பிளான்
தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 70ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
ரூ.398 ப்ரீபெய்ட் பிளான்
தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும்.
ரூ.379 ப்ரீபெய்ட் பிளான்
தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு