கடந்த சில மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிகமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக சில ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோவை விட அதிக நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்திடம் ஏற்கனவே ரூ.398 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களில் ஒரு ரூபாய்தான் வித்தியாசம். ஆனால் பல நன்மைகள் உள்ளது.
ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது.
ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
Airtel ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5 ஜிபி 4G/5G டேட்டாவுடன் வருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 70 ஜிபி கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே மாதிரியான வேலிடிட்டி மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. 1 ரூபாய் கூடுதலாகச் செலவு செய்தால் 14ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.