புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
திருமாவளவனை ஒருமையில் பேசிய வீடியோ அண்மையில் வெளியானது.இதனால் கோபம் அடைந்த விசிகவினர், ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்தனர். இந்த விவகாரத்தில் ஏர்போர்ட் மூர்த்தி தன் கையில் வைத்திருந்த சிறிய ரக கத்தியால் விசிக நிர்வாகி திலீபன் என்பவரது கையில் கிழித்ததால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.