அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், எச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. ரூ. 1.32 லட்சமாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, முக்கியமான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதாவது, புது டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் விமான கட்டணம் சுமார் ரூ. 37,000 என்ற அளவிலிருந்து பன்மடங்கு உயர்ந்து, இப்போது ரூ. 70,000 – ரூ. 80,000 ஆக உள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த 2 மணி நேரத்துக்குள் இந்த கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
