இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் அரசும் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானங்கள் தங்களது வான் பகுதியை பயன்படுத்தக் கூடாது என்று பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
வழக்கமாக இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைகளை பயன்படுத்தி செல்லும். ஆனால் தற்போது பாகிஸ்தான் இதற்கு தடை விதித்து இருப்பதால் இந்திய விமானங்கள் மாற்று பாதையில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளன.
இதன் காரணமாக பயணம் செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. கூடுதல் எரிப்பொருள் பயன்படுத்த வேண்டியது இருப்பதால் விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.