இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980-ல் இருந்து ரூ.42,448 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான கட்டணம் ரூ.7,746-ல் இருந்து ரூ.32,782 வரை உயர்ந்துள்ளது.
