சென்னையில் 7 ஆவது நாளாக இன்றும் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில், 7 ஆவது நாளாக இன்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டது.

நிர்வாக பிரச்சனையால், நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் 7 ஆவது நாளாக இன்றும் ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டது.

38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 நாட்களில் 5,000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News