15 சதவீதம் வரை கட்டணத்தை குறைத்த ஏர் இந்தியா நிறுவனம்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.

ஜூன் 12-ந் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் உள்நாட்டு சர்வதேச விமானத்தின் முன்பதிவு சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் உள்நாட்டு வழிதடங்களில் டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதமாகவும் ,சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 18 முதல் 22 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டிக்கெட்டுகளுக்கு வரவேற்பு இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தின் டிக்கெட் கட்டணம் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக நிலை தான் ,விரைவில் இந்நிலை மாறும் என இந்திய சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தலைவர் ரவி கோசன் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News