Saturday, July 19, 2025

மீண்டும் மீண்டுமா?.. புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் (Boeing 737 Max 8) இன்று (ஜூலை 19) காலை 6.41 மணிக்கு தாய்லாந்து புறப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பி வந்தது. தரையிறங்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு தான் அவசர தரையிறக்கத்திற்கு காரணம் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடந்த சில தினங்களாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்படுவதும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news