சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் 109 பேர் உடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
