ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங்குக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது
ஏர் இந்தியாவின் ஏஐ315 பயணிகள் விமானம் இன்று காலை ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஹாங்காங் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருக்கிறதா என்று வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீப காலமாக விமான தொழில்நுட்பக் கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.