திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.
விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, பாதுகாப்பாக தரையிறக்கினார்.