இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் நகரங்களுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து ஏர் இந்தியாவும், விமான சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீகர், ராஜ்கோட் ஆகிய 6 நகரங்களுக்கு விமான சேவை இல்லை என கூறியுள்ளது.