தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி இருந்த வீடியோ வெளியானது.
இதுதொடர்பாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள் என கூறியுள்ளார்.