சேலம் மாவட்டம் ஆத்தூர் கோரித்தெரு பகுதியை சேர்ந்த செல்வத்தின் மனைவி திவ்யா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் திருமண மண்டத்தில் திவ்யா தூய்மை பணி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது வினாயகபுரம் திருநாவுக்கரசு தெருவை சேர்ந்த சங்கர் என்பவர், திவ்யாவை வழிமறித்து ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
மேலும் இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட சங்கர் அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
