பேருந்து நிலையத்தை மறைத்து வைக்கப்பட்ட அதிமுக பேனர் : பயணிகள் அவதி

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் எதிரே பிரச்சாரக் கூட்டமானது நடந்தது.

இதில் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரும் வழித்தடத்தை ஆக்கிரமித்து 100 அடி நீளமுள்ள பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் பொதுமக்கள் வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதோடு சுற்றிவர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பிரச்சாரம் நடைபெற்ற சாலையில் ஸ்பீக்கர்கள், லைட்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால் அந்தப் பாதையை வாகனங்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடுமலை பேருந்து நிலையத்தை அடைத்தவாறு பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு மத்தியில் முக சுழிக்க வைத்துள்ளது.

Related News

Latest News