கூகுளின் ஜெமினியின் ஏஐ புகைப்படங்களுக்காக பதிவேற்றம் செய்யப்படும் போட்டோக்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுளின் ஜெமினியின் நேனோ பனானா ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன. அதிலும் saree trend எனும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது ஒருபக்கம் பொழுதுபோக்காக இருந்தாலும், மறுபக்கம் இந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை விடுத்த எச்சரிக்கையில், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை போலி இணையதளங்கள் அல்லது ஆப்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும் அது மட்டுமின்றி ஒரே கிளிக்கில் வங்கி கணக்கில் உள்ள பணம், சைபர் திருட்டு கும்பல்களின் கைக்கு போகலாம் எனவும் கூறியுள்ளது.
