சென்னை மதுரவாயலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேளாண் அதிகாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மதுரவாயல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாணவிக்கு, பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஒருவர் திடீரென மாணவியில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அந்த இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தார். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீஸ் நடத்திய விசாரணையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மத்திய வேளாண்துறை அதிகாரி என்பது தெரியவந்ததை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்
