தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28- ம் தேதி முடிவடையும். இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்ட நிலையில் நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.