ஜியோ 1ஜிபி தினசரி டேட்டா வழங்கும் ரூ.249 திட்டத்தை நிறுத்தியது. இதனை தொடர்ந்து ஏர்டெலும் ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள் இனி அதிக விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது ஏர்டெல் ரூ.249க்கு 24 நாட்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதால், பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.319 திட்டத்தை எடுக்க வேண்டியிருக்கும். இது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
ஜியோவில் 28 நாட்களுக்கு ரூ.299 (1.5ஜிபி/நாள்), ரூ.349 (2ஜிபி/நாள்) திட்டங்கள் மட்டுமே உள்ளன. வோடபோன் ஐடியா ரூ.299க்கு தினமும் 1ஜிபி டேட்டா திட்டம் வழங்குகிறது.