தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மட ரஸ்தா பகுதியில் சேர்ந்த தங்கப் பிராட்டி என்ற பெண்ணின் வீட்டிற்கு கடந்த 23 வருடங்களாக மின்சாரம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இது குறித்து நமது சத்தியம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டோம். .
செய்தி வெளியிட்ட நிலையில் இந்த செய்தி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பெயரில் தங்கப்பிராட்டியின் குடும்பத்திற்கு நேற்று நள்ளிரவு சாத்தான்குளம் பேரூராட்சியின் சார்பில் வீட்டு தீர்வை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை மின்வாரியத்துறை அதிகாரிகள் வந்து அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தற்போது அந்த வீட்டிற்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருளில் இருந்த அந்த வீடு தற்போது சத்தியம் தொலைக்காட்சியின் செய்தியின் எதிரொலியாக ஒளியூட்டப்பட்டுள்ளது.
23 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் தற்போது மின்சாரம் வந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் சத்தியம் தொலைக்காட்சி மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.