கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்கள், பெண்கள், சிறுமிகள் மீது ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தனர். அதனொரு பகுதியாக ரேடியோ பேகம் என்ற பெண்கள் வானொலி நிலையத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தொடர் கோரிக்கையை ஏற்று, தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊடகத்துறை கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதாக பெண்கள் உறுதி அளித்துள்ளனர் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.