ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்

383

தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார்.

இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை அழித்துவிட்டு பாஜக அந்த இடத்தில் அமர பார்க்கிறது என்று நிர்வாகிகளை உஷார்படுத்தி பகிரங்கமாக பேசினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமோ, மேகதாது விவகாரத்தில் கர்நாடக பாஜக அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சிக்கு தலைவர், செயல்தலைவர் பதவிகள் உருவாக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.