பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். இவர் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர் கூறியதாவது :
” சில மாதங்கள் முன்பு எனக்கு ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் தனுஷின் மேலாளர். தனுஷ் தயாரிக்கும் படத்தில் நீங்க நடிக்க முடியுமா என்று அந்த நபர் சொன்னார். அத்துடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.
தனுஷுடன் அட்ஜஸ்ட்மெண்ட் என்றாலும் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் போட்டார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
