கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராமன் நேற்று கோர்ட்டு வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News