கரூர் சம்பவத்தில் காவல்துறை மற்றும் தி.மு.க அரசை விமர்சித்த சர்ச்சைக்குரிய பதிவை, த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களே அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது என்று ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்.