2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் எதிர்பார்த்த மற்றும் எதிர்ப்பாராத விளைவுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிக விலைக்கு விற்பனையான வீரர்களை அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டு வருடமாக ஐபிஎல் ஏலத்தில் ஒதுக்கப்பட்டு, தற்போது கடைசி நிமிடத்தில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள டாப் ஸ்பின்னரை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசை பட்டியல் என இரண்டிலும் ஏழாவது இடத்தில் இருந்து வரும் Adam Zampaவை கடந்த வருடமும் எந்த அணியும் ஏலம் எடுக்காத நிலையில் இந்த வருடமும் அதே சூழல் நிலவியது.
ஆஸ்திரேலிய அணிக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் முன்னணி சுழல்பந்து வீச்சாளராக கலக்கும் Adam Zampa, 2021ஆம் ஆண்டு RCB அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆரம்ப விலையாக 1.5கோடி விலையுடன் பங்கேற்ற Zampaவை முக்கிய அணிகள் ஏதாவது ஒன்று ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விலை ஏதும் ஏற்றாமல் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப விலைக்கே ஏலம் எடுத்துள்ளது.
கொரோனா காலத்தின் போது நம்பி ஏலத்தில் எடுத்த அணிக்காக விளையாட வராமல் போனது மற்றும் ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் லீக்குடன் ஒப்பிட்டு ஐபிஎல் போட்டிகளை குறைத்து பேசியது ஆகியவையே Zampa குறைவான விலைக்கு ஏலம் போனதற்கு இரண்டு பிரதான காரணங்களாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.