Monday, January 26, 2026

மீண்டும் கம்பேக் கொடுத்த நடிகை ஸ்ரேயா !!

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘நான் வயலன்ஸ் (NON Violence) என்ற படத்தை உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், நான் வயலன்ஸ் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடியுள்ள ‘கனகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான ரெட்ரோ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி இருக்கிறார். இந்த பாடல் மூலம் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ம் ஆண்டு வெளியான ரௌத்திரம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்த அவரது கடைசி தமிழ் திரைப்படம் ஆகும்.

Related News

Latest News