Tuesday, August 12, 2025
HTML tutorial

நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், கடந்த 2021-ம் ஆண்டு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மீரா மிதுன் ஜாமீனில் வெளியான நிலையில், அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. தலைமறைவான மீரா மிதுனை பிடிக்க அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி டெல்லியில் மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் மனநல காப்பகத்தில் இருப்பதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை சென்னை அழைத்து வர இயலவில்லை என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News