Tuesday, January 27, 2026

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் நடிகை மனோரமா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.

மனோரமாவின் ஒரே மகன் பூபதி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார். அவரது மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News